தேசிய செய்திகள்

21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது: ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும் + "||" + No buses and trains to run during 21-day curfew: hospital, grocery and vegetable shops

21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது: ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும்

21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது: ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும்
21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது என்றும், ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று இரவு அறிவித்தார். அதைத்தொடர்ந்து, ஊரடங்கின்போது, என்னென்ன சேவைகள் கிடைக்கும், என்னென்ன சேவைகள் கிடைக்காது என்பது பற்றிய விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.


அதன்படி, பஸ், ரெயில், விமானம் என அனைத்துவகையான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள், மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், வர்த்தக, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்படும்.

ஆஸ்பத்திரி, நர்சிங் ஹோம்கள், போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், ஏ.டி.எம்.கள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். ரேஷன் கடைகள் மற்றும் உணவுப்பொருட்கள், மளிகை, பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன், கால்நடைத் தீவனம் ஆகியவை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும்.

வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், டெலிவிஷன் சேனல் அலுவலகங்கள் செயல்படும். சுற்றுலா பயணிகள் மற்றும் ஊரடங்கால் சிக்கித்தவிப்பவர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றுக்கும், மருத்துவ, அவசர பணியாளர்கள், விமான, கப்பல் சிப்பந்திகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

ராணுவம், துணை ராணுவப்படைகள், கருவூலம் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் செயல்படலாம். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சமையல் கியாஸ் நிறுவனங்கள், மின்சார அலுவலகங்கள், ஊர்க்காவல் படை, குடிநீர், துப்புரவு பணி ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அமல்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. இதன்படி, இந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாவிட்டால், ஓராண்டுவரை சிறைத்தண்டனை கிடைக்க வழி ஏற்படக்கூடும். கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக பொய்யான காரணங்களை கூறுவது, 2 ஆண்டுவரை சிறைத்தண்டனைக்கு வழி வகுக்கும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது - கொரோனா பரவுவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. பிரேசிலில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 11 பேர் பலி
பிரேசிலில் பஸ்-லாரி நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
3. மக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால் ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மக்கள் அவசியம் இன்றி பயணங்களை தொடர்ந்தால் மும்பையில் மின்சார ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.
4. கோவையில் கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: பஸ், ரெயில், விமானங்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது
கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் பஸ், ரெயில் மற்றும் விமானங்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது.
5. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பஸ், ரெயில்களில் சுகாதார பணி: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பஸ், ரெயில்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.