மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு


மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 10:51 AM IST (Updated: 5 April 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

போபால், 

மத்திய பிரதேசத்தில் சுகாதார பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று மட்டும்  புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்தது.

 ஏற்கனவே, கடந்த வியாழக்கிழமை  சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதையடுத்து, போபாலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வசித்து வரும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story