இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பெருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பெருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக 20 ஆயிரம் ரெயில்வே பெட்டிகள் மாற்றப்பட உள்ளன. கொரோனா பரவும் வேகம் அதிகரித்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தரப்பில் மருத்துவர் மனோஜ் முர்கேகர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1,86,906 ரத்த மாதிரிகள் இன்று வரை சோதனை செய்யப்பட்டுள்ளன. 7,953 மாதிரிகள் - 4.3% கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில், ஒரு நாளைக்குச் சராசரியாக 15,747 ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன . 40-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனினும், எதுவும் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. தற்போதைய சூழலில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லை” என்றார்.
Related Tags :
Next Story