புதிய கல்வி கொள்கை இம்மாதம் அறிவிப்பு - மத்திய அரசு தகவல்
இம்மாதம் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி,
‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழு, புதிய கல்விக்கொள்கை வரைவை தயாரித்துள்ளது. இது, இந்தி திணிப்புக்கு வழிவகுப்பதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.
அந்த கவலைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. மேலும், நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.க்கள் கூறிய யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன.
இதையடுத்து, புதிய கல்வி கொள்கை வரைவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இறுதி வடிவம் கொடுத்து வருகிறது. விரைவில், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இவ்வரைவு முன்வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இம்மாதம் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story