புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்

புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 21 May 2020 8:11 AM IST (Updated: 21 May 2020 8:29 AM IST)
t-max-icont-min-icon

புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.

லக்னோ, 

புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார். 

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்  மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக குறிப்பாக பாஜக வும் காங்கிரசும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்பும் விவகாரத்தில்  இழிவான அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. 

 புலம்பெயா்ந்த தொழிலாளா்களை பேருந்தில் அனுப்புவதற்கு பதிலாக காங்கிரஸ் அவா்கள் சொந்த ஊா் திரும்ப  பஸ், ரெயில் டிக்கெட் எடுத்துக்கொடுத்து உதவலாமே? பகுஜன்சமாஜ் கட்சித் தொண்டா்கள் எந்தவித விளம்பரமுமின்றி நாடுமுழுக்க உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றனா். பாஜக, காங்கிரஸைப் போல்  இழிவான  அரசியலில் ஈடுபடவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story