டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை -தகவல்கள்


டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை -தகவல்கள்
x
தினத்தந்தி 29 May 2020 5:23 AM GMT (Updated: 29 May 2020 5:23 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து வருகிறது.இருந்தும் தொடர்ந்து வலியுறுத்திய படியே இருக்கிறார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப்  

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு "பெரிய மோதல்" நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான "பெரிய மோதல்" குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் "நல்ல மனநிலையில்" இல்லை எனகூறினார்.

ஆனால்  இந்திய வெளியுறவுத்துறை வட்டாரா தகவல்கள் இதை மறுத்து உள்ளன. இரு தலைவர்களும் கடைசியாக ஏப்ரல் 4 ஆம் தேதி பேசியதாகவும், சமீபத்தில் எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவுடனான எல்லை மோதல்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சமீபத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழியாக இந்தியா அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா கோரியபோது அவர்கள் கடைசியாக பேசினர் என கூறப்பட்டு உள்ளது.


Next Story