10 ஆயிரம்படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டெல்லி தற்காலிக ஆஸ்பத்திரியில் அமித்ஷா ஆய்வு


10 ஆயிரம்படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டெல்லி தற்காலிக ஆஸ்பத்திரியில் அமித்ஷா ஆய்வு
x
தினத்தந்தி 27 Jun 2020 9:05 PM GMT (Updated: 27 Jun 2020 9:05 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், பலி எண்ணிக்கை 2,500 தாண்டியுள்ளது.

வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆஸ்பத்திரிகளில் போதிய இடம் இல்லை. இதனை சமாளிக்க தெற்கு டெல்லியில் உள்ள சதர்பூர் பகுதியில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 10 சதவிகிதப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்யப்படும் அட்டைகளிலிருந்து படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக ஆஸ்பத்திரியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார். அப்பேது டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடன் இருந்தார்.
கொரோனா நோயாளிகளுக்கான இந்த வசதியை செயல்படுத்த இந்தியதிபெத் எல்லைக் காவல்படை பொறுப்பேற்றுள்ளது.


Next Story