ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்


ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 1 July 2020 8:45 AM IST (Updated: 1 July 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் சோபூர் பகுதியில் இன்று காலை ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் காயம்  அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story