கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 152 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 52 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 17 பேர் தொடர்பில் இருந்தவர்களுக்கும், ராணுவத்தில் இருந்து திரும்பிய 19 வீரர்களுக்கும் உறுதியாகி உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,129 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,77,769 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், மாநிலத்தில் 135 கொரோனா ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story