அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு; அமைச்சரவை ஒப்புதல்


அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு; அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 6 July 2020 5:35 PM IST (Updated: 6 July 2020 5:35 PM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

சண்டிகர்,

அரியானாவில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  இதன் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா அரியானா துணை முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

கடந்த வருட தேர்தலின்பொழுது, அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்படும் என கூட்டணி கட்சிகள் அறிவித்தன.  இதன்படி, அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா அமைச்சரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதாவை துஷ்யந்த் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது.  இது அரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறியுள்ளார்.

Next Story