உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது.- பிரதமர் மோடி


உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது.- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 July 2020 5:45 PM IST (Updated: 15 July 2020 5:45 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் கூறியதாவது:- “
ஐரோப்பியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம். இந்தியாவும் ஐரோப்பாவும்  இயற்கைய்யான கூட்டாளிகள். நமது நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு உலக அமைதிக்கும் ஸ்திர தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் உண்மைத்தன்மை தற்போதைய சூழலில் மிகவும் தெளிவாக தெரிகிறது.

ஜனநாயகம், பன்முகத்தன்மை, சர்வதேச அமைப்புகளுக்கு மரியாதை சுதந்திரம், வெளிப்படத்தன்மை போன்ற ஒற்றுமையான கொள்கைகளை இந்தியாவும் ஐரோப்பாவும் பகிர்ந்து கொள்கின்றன.  கொரோனாவுக்கு பிறகு உலக அளவில் புதிய பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து வர வேண்டும்.  இன்றைய தேதி வரையில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் மருந்துகளை அனுப்பி வருகிறோம்” என்றார்.


Next Story