பாகிஸ்தானில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த போதை பொருட்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த போதை பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சண்டிகர்,
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ரவி ஆற்றில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் படகு ஒன்றில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். ஆற்றில் நாங்கிலி காட் பகுதியில் அதிகாலை 2.45 மணியளவில் அந்த படகு சென்று கொண்டிருந்தபொழுது, சந்தேகத்திற்குரிய வகையிலான பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிக்குள் மிதந்து வந்தது தெரிய வந்துள்ளது.
அந்த படகில் இருந்த படை வீரர்கள் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து கரைக்கு கொண்டு வந்தனர். இதன்பின் அவற்றை பிரித்ததில், போதை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் கயிறு ஒன்றால் நன்றாக கட்டப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அவை ஹெராயின் என்ற போதை பொருளாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story