தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்:வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் + "||" + Refrain From Communal Incitement India To Pak Over Ram Temple Remark

அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்:வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்:வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
அயோத்தி ராமர் கோவில் குறித்த பாகிஸ்தான் விமர்சனம் வகுப்புவாத தூண்டுதலில் இருந்து விலகி நிற்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
புதுடெல்லி:

நீண்ட கால சட்டப்போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோயில் கட்ட அனுமதி அளித்த இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குறைபாடுடையது என்று கூறியிருந்தது. இந்தியாவில் முஸ்லீம் சமூகத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது  தாக்குதல் நடத்துவது வளர்ந்து வருவதையும் இந்த தீர்ப்பு காட்டுவதாகவும் தெரிவித்திருந்தது.

 அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது குறித்த பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா இன்று கடுமையாக நிராகரித்ததோடு, அண்டை நாட்டை "வகுப்புவாத தூண்டுதலிலிருந்து" விலகி நிற்குமாறு  கேட்டுக் கொண்டது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-

பாகிஸ்தானின் அறிக்கையை இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தில் நாங்கள் கண்டிருக்கிறோம். பாகிஸ்தான்  இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் அதன் சொந்த சிறுபான்மையினரின் மத உரிமைகளை மறுக்கும் ஒரு தேசத்தின் ஆச்சரியமான நிலைப்பாடு அல்ல என்றாலும், இதுபோன்ற கருத்துக்கள் ஆழ்ந்த வருந்தத்தக்கவை" என்று கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்- ஐநாவில் இந்தியா
பாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என பயங்கரவாத எதிர்ப்பு பதிவு தொடர்பாக ஐ.நா. அமைப்பில் இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டியது
2. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்
இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதனை சீன மீடியா மறுத்து உள்ளது.
3. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.
4. குல்பூஷண் ஜாதவ் வழக்கு : பாகிஸ்தான் அவசர சட்டம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு தொடர்பாக அவசர சட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.
5. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...