தேசிய செய்திகள்

ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து + "||" + Sudden fire at a hotel used for corona treatment facility in Andhra Pradesh

ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து

ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளால் 1,842 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில், அங்கிருக்கும் ஓட்டல்களில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை ஒன்று பயன்படுத்தி வந்தது.  அந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
2. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தடை
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி
ரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசான மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முதல் மருந்து விற்பனை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது.
4. திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.
5. கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து: ஆயிரக்கணக்கான அகதிகள் சாலைகளில் தஞ்சம்
கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், ஆயிரக்கணக்கான அகதிகள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.