தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஒரு மாத மோதலுக்கு முடிவு: முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட் சந்திப்பு + "||" + End of month-long conflict in Rajasthan: Sachin Pilot meets cheif Minister Ashok Gehlot

ராஜஸ்தானில் ஒரு மாத மோதலுக்கு முடிவு: முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட் சந்திப்பு

ராஜஸ்தானில் ஒரு மாத மோதலுக்கு முடிவு: முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட் சந்திப்பு
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் பகையை மறந்து கை குலுக்கிக்கொண்டனர்.
ஜெய்ப்பூர், 

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் மாநில காங்கிரஸ் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

மேலும் சச்சின் பைலட்டுக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டதுடன், மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக தனித்தனி ஓட்டலில் தங்கி இருந்தனர்.

அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கு கோரி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு இருந்தார். இதில் மாநில அரசு தப்புமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிருப்தியாளரான சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தனர். கட்சியில் அவரது குறைகளை தீர்ப்பதற்காக சிறப்புக்குழு அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் அவர் சமரசம் ஆகி சுமார் ஒரு மாதத்துக்குப்பின் ராஜஸ்தான் திரும்பினார்.

இதனால் ராஜஸ்தான் அரசுக்கு நிலவிய நெருக்கடி நீங்கி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சச்சின் பைலட் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டுக்கு நேரில் சென்றார். அவரை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார். இருவரும் பகையை மறந்து கைகுலுக்கிக்கொண்டனர்.

அப்போது உடனிருந்த கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், அவினாஷ் பாண்டே, ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், கோவிந்த் சிங் தோதசரா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் ராஜஸ்தான் அரசில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக அசோக் கெலாட் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நடந்தது. இதில் இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரசில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பன்வார்லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கெலாட் அரசை கவிழ்க்க முயன்றதாக கூறி காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் இவர்கள் இருவரும் கடந்த மாதம் நீக்கி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் பா.ஜனதா சட்டமன்றக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளதாக மாநில எதிர்க்கட்சித்தலைவர் குலாப்சந்த் கடாரியா தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது, சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது, மாநில அரசை கவிழ்க்க முயன்ற புகாரை பா.ஜனதாவுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடந்து அரசு தோற்றிருக்கிறது. இவை அனைத்தையும் அந்த தீர்மானத்தில் நாங்கள் குறிப்பிடுவோம்’ என்று கூறினார்.

காங்கிரசில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டாலும், இன்னும் அந்த கட்சி சிறப்பாக இல்லை என்று கூறிய அவர், ஒருவர் கிழக்கே போனால் மற்றொருவர் மேற்கே போகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலியானார்.
4. ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...