ஆந்திராவில் இன்று மேலும் 8,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று மேலும் 8,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Aug 2020 1:39 PM GMT (Updated: 24 Aug 2020 1:39 PM GMT)

ஆந்திராவில் இன்று மேலும் 8,601 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. அதையடுத்து கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,601 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,61,712 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரேநாளில்  கொரோனாவால் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் 8,741 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,68,828 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 89,516 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story