தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் + "||" + Pakistani army launches indiscriminate attack on Kashmir

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஸ்ரீநகர்,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், போர் ஒப்பந்த விதிகளை மீறி நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காலை 11.30 மணியளவில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் பிரிவின் எல்லைக்கோட்டு பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியும், சிறிய ரக குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் இரவும் பூஞ்ச் மாவட்டத்தின் தேவ்கார், மால்டி பிரிவுகளை குறி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டது.


இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
2. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
3. காஷ்மீரில் 4 நாள்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடக்கம்
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, 4 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.