முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி


முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனு -  உச்சநீதிமன்றம் தள்ளுபடி
x
தினத்தந்தி 16 Sept 2020 11:34 AM IST (Updated: 16 Sept 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி, 

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. 

இந்த மனு மீதான விசாரணையின் போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தற்போது தமிழகத்துக்கு கால நீட்டிப்பு அளித்தால், அதைபோல் பிற மாநிலங்களும் கலந்தாய்வு கடைசி தேதியை நீட்டிக்க கோருவர் என்றும், எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என்றும் மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Next Story