காஷ்மீரில் என்கவுண்ட்டர்; லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை


காஷ்மீரில் என்கவுண்ட்டர்; லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 25 Sep 2020 5:50 AM GMT (Updated: 2020-09-25T11:20:05+05:30)

காஷ்மீரில் சிர்ஹாமா பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Next Story