டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது - காவல்துறை


டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது - காவல்துறை
x
தினத்தந்தி 4 Oct 2020 8:12 AM IST (Updated: 4 Oct 2020 8:12 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக காஷ்மீரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “

 டெல்லியின் மத்திய பகுதியான ஐடிஓ பகுதியில் அதி நவீன பிஸ்டல்கள் மற்றும் 120 சுற்றுகள் சுடக்கூடிய வெடிமருந்துகள் ஆகியவற்றுடன் நடமாடிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புல்வமா பகுதியை சேர்ந்த  அல்டாப் அகமது தார் (வயது 25) , சோபியான் பகுதியை சேர்ந்த அகிப் சாஃபி (22)  இஷ்பாக் மஜீத் கோகா(28)  முஸ்தாக் அகமது கானி (27)  என தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட இஷ்பாக் என்பவர்  ஜம்மு காஷ்மீரில்  சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்கான் கோகா- என்பவனுடைய  மூத்த சகோதர் ஆவார்.  பர்கான் கோகா என்கவுண்டரில் கொல்லப்பட்டதும், பயங்கரவாதிகள், அவரது சகோதரர்  இஷ்பாக் மஜீத் கோகாவை அணுகியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story