தேசிய செய்திகள்

பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக பதிலடி + "||" + Rahul Gandhi Taunts PM Over Wind Turbine Ideas, Ministers Hit Back

பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக பதிலடி

பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக  பதிலடி
காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
புதுடெல்லி,

காற்றலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அண்மையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது டென்மார்க் நாட்டை சேர்ந்த காற்றலை நிறுவன சிஇஓ ஹெண்ட்ரிக் ஆண்டர்சன் என்பவரிடம்   பேசிய பிரதமர் மோடி, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

பிரதமர் மோடியின் வினவிய இந்த வீடியோ தொகுப்பை தனது டுவிட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, “ 'இந்தியாவுக்கான உண்மையான ஆபத்து என்னவென்றால், நம்முடைய பிரதமருக்குப் புரியாமல் இருப்பது அல்ல. அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒருவருக்குக்கூட, அவரிடம் உண்மையைச் சொல்ல துணிச்சல் இல்லை என்பதே” என்றார். 

ராகுல் காந்தியின் கருத்தை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “ உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களே மோடியின் கருத்தை அங்கீகரிக்கும் போது,  ராகுல் காந்தி பிரதமர் மோடியை கேலி செய்கிறார்.  ராகுல் காந்திக்குப் புரிந்துகொள்ளும் சக்தியில்லை என்று அவரிடம் சொல்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குத் துணிச்சல் இல்லை” என தெரிவித்துள்ளார்.  அதேபோல், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டு மக்களிடம் காங். மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர்.
2. திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
3. துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்- பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்
பீகாருக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றால், பிற மாநில மக்கள் பணம் செலுத்த வேண்டுமா? எனவும் பாஜக தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே சாடினார்.
4. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5. இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.