ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
x
தினத்தந்தி 25 Oct 2020 1:57 AM GMT (Updated: 25 Oct 2020 1:57 AM GMT)

மெகபூபா முப்தி தேசியக் கொடியை அவமதித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தேசிய மாநாட்டு கட்சி,மக்கள் ஜனநாயக கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டமைப்பை அண்மையில் உருவாக்கின. இந்தக் கூட்டமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லாவும் துணைத்தலைவராக மெகபூபா முப்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்த கூட்டத்திற்கு பிறகு நேற்று பேசிய பரூக் அப்துல்லா, “ குப்கர் கூட்டமைப்பு தேசத்துக்கு எதிரானது இல்லை. பாஜகவுக்கு எதிரானது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதே இந்தக் கூட்டமைப்பின் நோக்கம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் தங்கள் உரிமைகளை திரும்ப பெறவேண்டும் என்பதே எங்களின் இலக்கு” என்றார். 

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றியே ரத்து செய்யப்பட்டது. எனவே, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பே இல்லை’ என்றார். 

Next Story