இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையிலான 2 நாள் முத்தரப்பு பயிற்சி


இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையிலான 2 நாள் முத்தரப்பு பயிற்சி
x
தினத்தந்தி 22 Nov 2020 10:02 AM GMT (Updated: 22 Nov 2020 10:02 AM GMT)

அந்தமான் கடற்பகுதியில் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையிலான 2 நாள் முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான 2 நாள் முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. சைட்மெக்ஸ்- 20 என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொடர்பில்லாத வகையில் கடற்பகுதியில் மட்டுமே இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான கமோர்டா மற்றும் ஏவுகணை தாங்கிக் கப்பலான கர்முக் ஆகியவை இந்த பயிற்சியில் பங்கு பெறுகின்றன. இவை நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், பொதுவான புரிதலை வளர்க்கவும், கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தேவையான சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த வருடப் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை தலைமை ஏற்று நடத்துகிறது.

Next Story