புதுச்சேரி: மாணவர்கள் நலனுக்காக ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை


புதுச்சேரி:  மாணவர்கள் நலனுக்காக ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 1:35 PM GMT (Updated: 23 Nov 2020 1:35 PM GMT)

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் மாணவர்கள் நலனை முன்னிட்டு ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.  புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.  ஆனால், நிதிசுமை காரணமாக, தற்போது காரைக்காலில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் நாள்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரை செலவு செய்து பள்ளிக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், தனியார் மற்றும் தமிழக பேருந்துகளை பயன்படுத்தி கூட்ட நெரிசலுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதால், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அச்சமும் எழுந்துள்ளது.

இதனால் ஒரு ரூபாய் கட்டண சிறப்பு பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story