தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார் + "||" + PM Modi likely to lay foundation stone of new Parliament building in December

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, 

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. இடவசதி கருதி, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது. இன்னும் இறுதி தேதி முடிவு செய்யப்படவில்லை.

முக்கோண வடிவத்தில் அமையும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன், ஒரு பொது மத்திய செயலகம் கட்டவும், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. நீள ராஜபாதையை மேம்படுத்தவும் புதிய மத்திய அதிகார வளாக மறுமேம்பாட்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், உணவருந்தும் இடம் மற்றும் போதுமான வாகனநிறுத்தப் பகுதி ஆகியவை அமைந்திருக்கும்.

அனைத்து எம்.பி.களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்படும். அவை காகித ஆவணங்களற்ற அலுவலகங்களாக செயல்படும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள் இருக்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ.861.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கிறது. கட்டுமானப் பணி 21 மாதங்களில் முடிவடையும் என கருதப்படுகிறது.

புதிய கட்டிட பணியைத் தொடர்ந்து, தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட 5 தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணி முடிவடைந்ததும், அந்த வளாகத்தில் இந்த சிலைகள் நிறுவப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2. கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது - சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்கள்
கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3. பா.ஜனதாவுக்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ,பிரதமர் மோடி மட்டும் குரல் கொடுத்தால் போதும் - குஷ்பு
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு உரிமையில்லை என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
4. இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்
இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .
5. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்டார்; பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றுகிறார்; நடிகை சரோஜாதேவி பேட்டி
கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்டு பிரதமர் மோடி சிறப்பாக மக்கள் பணியாற்றுவதாக நடிகை சரோஜாதேவி கூறினார்.