தேசிய செய்திகள்

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி + "||" + India's BrahMos supersonic missile test success

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படையினரால் இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் அந்தமான் நிகோபர் தீவு பகுதிக்கு உட்பட்ட கார் நிகோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை 9.25 மணியளவில் விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.  குறிப்பிட்ட இலக்கில் இருந்த கப்பலை, ஏவுகணை சரியாக தாக்கியது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
வானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
2. பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
3. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
4. அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. ஐ.பி.எல். போட்டி; 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.