அசாம் வன பகுதியில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்; பாதுகாப்பு படை வேட்டை
அசாமின் வன பகுதியில் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
கோக்ராஜர்,
அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் கொசைகாவன் காவல் நிலயத்திற்கு உட்பட்ட பகுதியின் கீழ் அமைந்த ரிபூ வன பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் வன பகுதியில் இருந்து அதிக அளவிலான கைத்துப்பாக்கிகள், பெரிய அளவிலான துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், எறிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இவற்றை யார் கொண்டு வந்து வன பகுதியில் விட்டு சென்றது என்ற விவரம் தெரியவரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story