இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Dec 2020 11:34 AM GMT (Updated: 2020-12-16T17:04:29+05:30)

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா,

இஸ்ரோ கடந்த மாதம் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீன ரக புவிகண்காணிப்பு செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  

இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 2.41 மணிக்கு தொடங்கியது. இதன்படி நாளை (17ம் தேதி) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.41 மணிக்கு இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இந்த செயற்கைகோளில் உள்ள சி-பேண்ட் அலைக்கற்றைகள் இணைய சேவை மற்றும் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி ராக்கெட் ரக வரிசையில் 52வது ராக்கெட் ஆகும். சி.எம்.எஸ்-01 செயற்கைகோள் இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும். இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை இந்த செயற்கைகோள் மேம்படுத்த உதவும்,


Next Story