இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி


இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 3 Jan 2021 5:45 AM GMT (Updated: 3 Jan 2021 6:33 AM GMT)

கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவிஷீல்டு  தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்து செய்தது. கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம். 

2 நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது. 

2 தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிக்கலாம்.கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 3-வது கட்ட சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ” என்றார். 

Next Story