தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Maharashtra reports 2,294 new cases; 8 die in Mumbai

மராட்டியத்தில் இன்று மேலும் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 94 ஆயிரத்து 977 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று மாநிலத்தில் 4 ஆயிரத்து 516 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை மொத்தம் 18 லட்சத்து 94 ஆயிரத்து 839 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். இதன்மூலம் குண்மடைவோர் விகிதம் 94.98 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது 48 ஆயிரத்து 406 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநிலத்தில் மேலும் 50 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 50 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இறப்பு விகிதம் 2.53 சதவீதமாக உள்ளது.

தலைநகர் மும்பையில் புதிதாக 473 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,03,621 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 8 பேர் பலியானதால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 257 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,702 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி அமித்ஷா ஆலோசனை; சுகாதாரத்துறை மந்திரி, அதிகாரிகள் பங்கேற்பு
மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தது பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.