நேதாஜியின் 125வது பிறந்த தின கொண்டாட்டம்; கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி


நேதாஜியின் 125வது பிறந்த தின கொண்டாட்டம்; கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Jan 2021 11:33 AM GMT (Updated: 23 Jan 2021 11:33 AM GMT)

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ளார்.

கொல்கத்தா,

பிரதமர் மோடி, அசாம் மாநிலத்தில் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மனைகளுக்கான பட்டாக்களை இன்று வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது.

இதன்பின்னர் அவர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகருக்கு புறப்பட்டார்.  இந்திய தேசிய ராணுவம் என்றொரு அமைப்பினை உருவாக்கி இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அவரை கவுரவிக்கும் வகையில், பராக்கிரம திவாஸ் எனப்படும் துணிச்சல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்துள்ளார்.  பின்னர் கொல்கத்தாவிலுள்ள நேதாஜி பவன் மற்றும் தேசிய நூலகம் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி சென்றார்.

நூலகத்தில் இருந்த கலைஞர்கள் மற்றும் சிறப்பு குழுவினரிடம் பிரதமர் உரையாடினார்.  இதன்பின்பு கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா நினைவகத்திற்கு அவர் சென்றார்.  அவரை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜக்தீப் தங்கார் வரவேற்றனர்.  இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Next Story