நாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது: ரெயில்வே அமைச்சகம் தகவல் + "||" + Mail, express train operations reach 65% of pre-COVID level:
நாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது: ரெயில்வே அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமான ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் படிப்படியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியியிட்ட அறிக்கையில்,
கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்திய ரெயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகைகால சிறப்பு ரெயில்கள் உள்பட மொத்தம் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள புறநகர் ரெயில் சேவைகளில் மொத்தம் 4,807 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.