தேசிய செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு அவையில் ஒப்புதல் + "||" + Parliament approved the decision to appoint a Rajya Sabha MP as a member of Madurai AIIMS Hospital

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு அவையில் ஒப்புதல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு அவையில் ஒப்புதல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த அக்டோபர் மாதம் தலைவர், துணை வேந்தர் உள்ளிட்ட 14 உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருக்கும் வி.எம்.கடோச் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த 14 உறுப்பினர்கள் தவிர மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேலும் 3 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதில் இருவர் மக்களவையில் இருந்து நியமிக்கப்படுவார்கள், ஒருவர் மாநிலங்களவையில் இருந்து நியமிக்கப்படுவார். 

அந்த அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி. ஒருவரை மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முன்மொழிந்த தீர்மானத்திற்கு மாநிலங்களவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்.பி.க்களில் யார் அந்த உறுப்பினர் என்பதை மத்திய அரசு தேர்வு செய்து அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
4. மதுரை எய்ம்ஸ் தலைவராக டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் மத்திய அரசு அறிவிப்பு
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் யார்? மத்திய அரசு அறிவிப்பு
மதுரை அருகே உள்ள தோப்பூரில் ரூ. 1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.