கர்நாடக மாநிலம் முழுவதும் 42 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்


கர்நாடக மாநிலம் முழுவதும் 42 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
x
தினத்தந்தி 14 Feb 2021 11:38 AM GMT (Updated: 14 Feb 2021 11:38 AM GMT)

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

42 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

கொரோனா, இடைத்தேர்தல், மழை-வெள்ளம் ஆகியவை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதனால் கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் தாமதமாகி வந்தது. இதன் எதிரொலியாக அரசின் திட்டங்கள் கிடப்பில் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கர்நாடக அரசு 42 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மண்டியா கலெக்டர்
*கர்நாடக அரசின் கூட்டுறவு துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றிய துஷார் கிரிநாத், கர்நாடக அரசின் நகர வளர்ச்சி கழகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* கன்னடம் மற்றும் கலாசார துறையின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த ரஷ்மி மகேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறையின் முதன்மை செயலாளராக இனி பணியாற்றுவார்.

* நகர வளர்ச்சி கழகத்தின் செயலாளராக பணியாற்றிய ரவிசங்கர், கன்னட மற்றும் கலாசார துறையின் செயலாளராக இனி தனது பணியை தொடர்வார்.

* வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கமிஷனராக பணியாற்றி வந்த திரிலோக் சந்திரா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ஆயுஷ்துறையின் கமிஷனராக இனி பணியாற்றுவார்.

* மண்டியா மாவட்ட கலெக்டராக பணியாற்றிய வெங்கடேஷ், கர்நாடக நீர்நிலை துறையின் கமிஷனராக இனி பணியாற்றுவார்.

* சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம், பெங்களூரு வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக தனது பணியை தொடா்வார்.

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த கனகவள்ளி, கர்நாடக தொழில்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இனி பணியாற்றுவார்.

* கர்நாடக சிறிய தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ராம் பிரசாத் மனோகர், கர்நாடக மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக இனி பணி செய்வார்.

* ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் குமார், கலபுரகியில் உள்ள கல்யாண-கர்நாடக மண்டல வளர்ச்சி கழக இணை செயலாளராக பணியாற்றுவார்.

சிவமூர்த்தி

* பெங்களூரு நகர கலெக்டராக பணியாற்றி வந்த சிவமூர்த்தி, கரும்பு வளர்ச்சி துறையின் கமிஷனராகவும், சர்க்கரை துறையின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு மாநகராட்சியில் சிறப்பு கமிஷனராக (நிர்வாகம்) பணியாற்றிய மஞ்சுநாத், பெங்களூரு நகர கலெக்டராக இனி பணியாற்றுவார்.

* பெங்களூருவில் சகாலா திட்டத்தின் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வரும் மமதா, கர்நாடக பொது நிலங்கள் கழக நிர்வாக இயக்குனராக இனி செயல்படுவார்.

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹெப்சிபா ராணி குர்லபடி, நகர கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றுவார்.

* துமகூரு கலெக்டராக பணியாற்றிய ராகேஷ்குமார், சுற்றுலா துறை இயக்குனராக இனி பணியாற்றுவார்.

* தட்சிண கன்னடா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் செல்வமணி, கோலார் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* காத்திருப்போர் பட்டியலில் உள்ள அஸ்வதி, மண்டியா கலெக்டராக இனி செயல்படுவார்.

* தனி மற்றும் நிர்வாக சீர்த்திருத்த பிரிவில் துணை செயலாளராக பணியாறறி வந்த முல்லை முகிலன், இனி உத்தர கன்னடா மாவட்ட கலெக்டராக பணியாற்றுவார்.

* தலைமையகம் மற்றும் ஆய்வு, கலால்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய வெங்கட் ராஜா, ராய்ச்சூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

குருதத் ஹெக்டே

* மைசூரு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வரும் குருதத் ஹெக்டே, கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக இனி செயல்படுவார்.

* விஜயாப்புரா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் லட்சுமிகாந்த் ரெட்டி, கர்நாடக உணவு மற்றும் பொது வினியோக கழகத்தின் நிர்வாக இயக்குனராக இனி பணியாற்றுவார்.

* கதக்கில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆனந்த், தனி மற்றும் நிர்வாக சீர்த்திருத்த பிரிவின் துணை செயலாளராக பணியாற்றுவார்.

* பீதரில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றும் ஞானேந்திர குமார் கங்வார், மைசூருவில் உள்ள நிர்வாக பயிற்சி மையத்தின் இணை இயக்குனராக பணியாற்றுவார்.

* உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் துணை மண்டலத்தில் உதவி கமிஷனராக பணியாற்றும் பரத், கதக் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் நீர்நிலை வளர்ச்சி கழகத்தின் கமிஷனராக பணியாற்றும் சதீசா, சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரவி, பெங்களூருவில் உள்ள சகாலா திட்டத்தின் கூடுதல் இயக்குனராக இனி செயல்படுவார்.

சத்யபாமா

* பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் ரவீந்திரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கமிஷனராக இனி செயல்படுவார்.

* வேளாண் சந்தை கழகத்தின் இயக்குனராக பணியாற்றும் கரிகவுடா, மைசூருவில் உள்ள நிர்வாக பயிற்சி மையத்தின் இணை இயக்குனராக இனி பணி செய்வார்.

* உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் ஹரீஷ்குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனராக இனி பணியாற்றுவார்.

* பெங்களூருவில் சுற்றுலா துறை இயக்குனராக பணி செய்த ரமேஷ், சிக்கமகளூரு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் நில ஆவண காப்பகத்தில் கமிஷனராக பணியாற்றிய பட்டீல் எலகவுடா சிவனகவுடா, துமகூரு மாவட்ட கலெக்டராக இனி செயல்படுவார்.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கமிஷனராக செயல்பட்டு வந்த சீனிவாஸ், பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* கோலார் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சத்யபாமா, கர்நாடக சிறிய தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக இனி பணியாற்றுவார்.

* கலபுரகியில் கூடுதல் பிராந்திய கமிஷனராக பணியாற்றிய ஜகீரா நசீம், இனி பீதர் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றுவார்.

* முதல்-மந்திரியின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய விஜய் மகாந்தேஷ் பி.தனமன்னவர், தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இனி செயல்படுவார்.

* விஜயாப்புரா மாவட்ட பஞ்சாயத்து துணை செயலாளராக பணியாற்றிய கோவிந்த ரெட்டி, விஜயாப்புரா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த பாரதி, பெங்களூருவில் உள்ள வேளாண் சந்தை கழக நிர்வாகத்தின் இயக்குனராக இனி பணி செய்வார்.

* கர்நாடக மின் நிறுவன கழகத்தின் இயக்குனராக பணியாற்றிய பிரபுலிங் கவலிகட்டி, தி கூட்டி தங்க சுரங்க நிறுவன நிர்வாக இயக்குனராக இனி பணியாற்றுவார்.

* கர்நாடக மின் பகிர்மான கழகத்தின் இயக்குனராக பணியாற்றிய கங்காதரசாமி, துமகூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இனி பணி செய்வார்.

* சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் மருத்துவ கல்வி மந்திரியின் தனி செயலாளராக பணியாற்றிய நாகேந்திர பிரசாத், சிக்பள்ளாப்பூர் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சிக்கமகளூருவில் உதவி கலெக்டராக பணியாற்றிய குமார், தட்சிண கன்னடா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் பழங்குடியினர் நலன் துறை இயக்குனராக பணியாற்றிய சங்கப்பா, பெங்களூரு நகர மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இனி பணியாற்றுவார்.

* மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றிய பரமேஷ், ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இனி செயல்படுவார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story