மும்பை தாராவியை மீண்டும் மிரட்டும் கொரோனா ஆறு மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு உயர்வு


மும்பை தாராவியை மீண்டும் மிரட்டும் கொரோனா ஆறு மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு உயர்வு
x
தினத்தந்தி 20 March 2021 1:27 AM GMT (Updated: 20 March 2021 1:27 AM GMT)

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு ஆறு மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு உயர்ந்துள்ளது.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடம் என்பதால், தாராவி பகுதியில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராவியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு அங்கு வேகமாக தொற்று பரவியது. அரசின் தீவிர நடவடிக்கையால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அங்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு அங்கு சில நாட்கள் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.

இந்தநிலையில் தாராவியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் அங்கு 21 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அங்கு நேற்று புதிதாக 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தாராவி குடிசைப்பகுதியில் கடந்த செம்படம்பர் மாதத்திற்கு பிறகு இந்தளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது தான் முதல் முறை ஆகும். அங்கு இதுவரை 4 ஆயிரத்து 328 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 ஆயிரத்து 872 பேர் குணமடைந்து உள்ளனர். 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியை போல தாதர், மாகிமிலும் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதில் தாதரில் 41 பேருக்கும், மாகிமில் 31 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story