தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு + "||" + UP: 7 officials suspended as death toll in Chitrakoot hooch tragedy rises to 5

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
சித்ரகூட், 

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள கோபா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இறந்தனர். மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். மற்ற இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, குறிப்பிட்ட பகுதி துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு, மாவட்ட கலால் அதிகாரி, கலால் ஆய்வாளர், போலீஸ் டி.எஸ்.பி., எஸ்.ஐ. உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மது விற்பனை ஒப்பந்ததாரர், மதுக்கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட மதுக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதரஸா மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி: உத்தரபிரதேச முதல்வர் உத்தரவு
மதரஸா மாணவர்கள் கல்லூரி,பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் இதானால் 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.
2. போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகம்
போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகமாடுகின்றனர்
3. உத்தரபிரதேசத்தில் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதியதில் 6 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
4. உத்தரபிரதேசத்தில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் காணாமல் போன 2 சகோதரிகள் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
5. காதல் விவகாரம்: மகளை கொலை செய்து தலையுடன் போலீஸ் நிலையம் சென்ற தந்தை
பெற்ற மகளை தலை துண்டிக்க கொலை செய்ததோடு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு பட்டப்பகலில் தந்தை தெருவில் நடந்து சென்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.