மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கியது


மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 26 March 2021 5:43 PM GMT (Updated: 26 March 2021 5:43 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை முன்பை விட வீரியமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில் நேற்று புதிய உச்சமாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது.

ஆனால் இன்று  பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியம் முழுவதும் இன்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 902 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இது ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும்.

இதன்மூலம் மராட்டியத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது. இதுவரை 26 37 ஆயிரத்து லட்சத்து 735 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டும் இன்றி நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 907 ஆக அதிகரித்தது.


Next Story