கேரளாவில் இன்று 8,778 பேர் கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 8,778 பேர் கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 2,642 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனால் கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,25,775 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இன்று 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,836 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 8,326 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com