கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க பா.ஜனதா அரசு தவறி விட்டது; ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க பா.ஜனதா அரசு தவறி விட்டது; ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 April 2021 5:21 PM GMT (Updated: 17 April 2021 5:21 PM GMT)

பெங்களூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;-

மாநிலத்தில் கொரோனா 2-வது அலை உருவானதும், மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு தவறி விட்டது. அரசு முன் எச்சரிக்கையாக செயல்பட்டு, கொரோனா பரவலை தடுக்க சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்க வேண்டும். தற்போதாவது அரசு சுதாரித்து கொண்டு கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தில் அரசு அலட்சியமாக இருக்க கூடாது.

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை அறிந்து அரசு செயல்பட வேண்டும். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story