மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் -பிரதமர் மோடி


மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 April 2021 7:48 AM GMT (Updated: 23 April 2021 8:12 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மகாராஷ்டிரத்தின் பால்கர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14- ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  மராட்டிய  மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்தில் ஏற்பட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 

இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

 அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story