அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

அரசியல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு சரிவர கையாளவில்லை என ஆரம்பம் முதலே காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில், பிரதமரின் மன் கி பாத் உரை மற்றும் கொரோனா விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, ஜன் கி பாத் (மக்களின் குரல்) முக்கியம். இந்த சிக்கலான நேரத்தில் தேசத்துக்கு பொறுப்புள்ள குடிமகன்கள் அவசியம். காங்கிரஸ் கட்சியில் உள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால்,உங்களின் அரசியல் பணியை ஒதுக்கிவைத்து, இந்திய மக்களுக்கு உதவுங்கள், உதவிக்காக தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இதுதான் காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com