மராட்டிய தலைநகர் மும்பையில் 14 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்


மராட்டிய தலைநகர் மும்பையில் 14 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 25 April 2021 9:12 PM GMT (Updated: 25 April 2021 9:12 PM GMT)

மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் 14 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மந்திரி ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மருந்து தேவைக்கான ஆக்சிஜன் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மும்பை பெருநகரில் 14 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என மாநில நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

“மும்பை பெருநகரில் 14 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாட்களில் உற்பத்தி தொடங்கிவிடும். இதில் 3 நிலையங்கள் தானே மாநகராட்சி எல்லைக்குள் அமைக்கப்பட உள்ளது. 

கல்யாண் டோம்பிவிலி, நவிமும்பை மாநகராட்சியில் தலா 2 நிலையங்களும், பிவண்டி, உல்லாஸ்நகர், அம்பர்நாத், பத்லாப்பூர், மிரா பயந்தா், வசாய்-விரார், பன்வெல் ஆகிய பகுதிகளில் தலா ஒரு நிலையம் அமைக்கப்படும். இதில் ஒரு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 2 டன் ஆக்சிஜன் உற்பத்திசெய்யப்படும். ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்த நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story