பெங்களூருவில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல் - தென்மேற்கு ரெயில்வே தகவல்


பெங்களூருவில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 28 April 2021 2:39 AM GMT (Updated: 28 April 2021 2:39 AM GMT)

பெங்களூருவில் ஊரடங்கு காரணமாக 14 நாட்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால், தினசரி கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கர்நாடக அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக பெங்களூரு பனசங்கரி, ஜெயநகர், கோரமங்களா, கே.ஆர்.மார்க்கெட், ஐகோர்ட்டு, விதான சவுதா, எலெக்ட்ரானிக் சிட்டி, எலகங்கா ஆகிய 8 பகுதிகளில் இயங்கி வரும் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், முழு ஊரடங்கு அமலில் இருக்கும் 14 நாட்களும் மூடப்பட்டு இருக்கும். இதனால் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் அந்த மையங்களுக்கு செல்ல வேண்டாம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story