இட ஒதுக்கீடு வழக்கு: மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது - டாக்டர் ராமதாஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 May 2021 9:51 PM GMT (Updated: 9 May 2021 9:51 PM GMT)

இட ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இட ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்கவும், ஒரு சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட தன்மையை தீர்மானிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை; அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தத் தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது.

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தான் இனி எந்தெந்த சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க முடியாது என்று 5 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு 3:2 பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்திருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 342-வது பிரிவில் திருத்தம் செய்து, மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யார் யாரை சேர்க்கலாம் என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இப்போது இழைக்கப்பட்டுள்ள சமூகஅநீதியை களைய முடியும்” என்று அதில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  .

Next Story