கர்நாடகத்தில் ரூ.13.4 கோடியில் 10 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி


கர்நாடகத்தில் ரூ.13.4 கோடியில் 10 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 13 May 2021 3:27 AM GMT (Updated: 13 May 2021 3:27 AM GMT)

கர்நாடகத்தில் ரூ.13,487 கோடியில் 10 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட ஆலோசனை குழுவின் 56-வது கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் 10 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது பெங்களூரு நகர மாவட்டத்தில் ரூ.4,042 கோடியும், பெங்களூரு புறநகரில் ரூ.3,425 கோடியும், பல்லாரியில் ரூ.1,204 கோடியும், சித்ரதுர்காவில் ரூ.555 கோடியும், சாம்ராஜ்நகரில் ரூ.731 கோடியும், சிக்பள்ளாப்பூரில் ரூ.1,000 கோடியும், மங்களூருவில் ரூ.2,527 கோடியும் முதலீடு செய்யப்படுகிறது.

மொத்தம் ரூ.13,487 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்கள் மூலம் 6,256 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் திட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, சிமெண்டு, பெட்ரோலியம் பொருட்கள், ரசாயனம், என்ஜினீயரிங் உபகரணங்கள், மென்பொ

Next Story