ஜூலை மாதத்திற்குள் 51 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்


ஜூலை மாதத்திற்குள் 51 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 15 May 2021 10:24 PM GMT (Updated: 15 May 2021 10:24 PM GMT)

இந்தியாவில் வரும் ஜூலை மாதத்திற்குள் 51.6 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட தகவலி, இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது. 

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஜூலை மாதத்திற்குள் 51 கோடியே 6 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்படும் என்று மத்தி சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடனான கூட்டத்தில் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை சரியான விகிதத்தில் பிரிக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே 18 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூலை மாதத்திற்குள் 51 கோடியே 6 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்படும். சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி, பாரத் பயோடெக்கின் நசல் தடுப்பூசி, ஜைடஸ் ஹடிலா தடுப்பூசி, ஜெனோவா எம்ஆர்என்ஏ தடுப்பூசியுடன் சேர்த்து ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசியின் இருப்பு ஆகஸ்ட் மாதத்திற்குள் 216 கோடி டோஸ்களாக் அதிகரிக்கும்’ என்றார்.

Next Story