பெங்களூருவில் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்


பெங்களூருவில் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
x
தினத்தந்தி 16 May 2021 2:00 AM GMT (Updated: 16 May 2021 2:00 AM GMT)

பெங்களூருவில் தனியார் பள்ளி 120 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூருவில் மருத்துவ சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை மற்ற பெருநகரங்களை விட அதிகமாக உள்ளது. அதனால் கர்நாடக அரசு, பெங்களூருவில் கொரோனா சிகிச்சை மையங்களை அதிக எண்ணிக்கையில் திறந்து வருகிறது.

அந்த வகையில் பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 120 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 60 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் 2 படுக்கைகள் வீதம் 120 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொரோனா சிகிச்சை மையத்தை பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பெங்களூருவில் முதல் முறையாக ஒரு தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story