தேசிய செய்திகள்

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது; மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது; 7-ம் ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் கருத்து + "||" + Modi govt harmful for country; Congressional opinion on the occasion of the 7th anniversary

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது; மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது; 7-ம் ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் கருத்து

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது; மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது; 7-ம் ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் கருத்து
மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது. மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது என்று மோடி அரசின் 7-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

பேரழிவு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், தலைமை செய்தித்தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகால மோடி அரசின் கதை முழுவதும் எப்போதும் இல்லாத பேரழிவுகளும், பொறுப்பை தட்டிக்கழிப்பதும், மக்களை கைவிடுவதுமாக இருக்கிறது. இந்த அரசு, பிரதமர் மீது மக்கள் வைத்திருந்த உள்ளார்ந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது. இது, நாட்டுக்கு தீங்கானது. ஏராளமான வாக்குறுதிகளின் அடிப்படையில் ேதர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 140 கோடி மக்களை மிக மோசமாக வஞ்சித்துள்ளது. எனவே, கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

பெட்ரோல் விலை

7-ம் ஆண்டு ஆட்சி முழுவதும் அளவிட முடியாத வேதனையும், மீளமுடியாத பேரழிவும், புரிந்துகொள்ள இயலாத வேதனையும் நிறைந்ததாக உள்ளது. பெருந்தொற்றுக்கு இடையே மக்களை கைவிட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களை பலியாக விட்டு விட்டது. வறுமைக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக, ஏழை, நடுத்தர, நலிந்த பிரிவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி உள்ளது. வளமான பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளி விட்டது. முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் ஏறியதற்கு மோடி அரசே பொறுப்பு. கடுகு எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.200-க்கு மேல் ஏறிவிட்டது.

காங்கிரசின் முன்னுரிமை

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் மோடி அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்ைதயே தகர்த்து விட்டது. சீன படைகளை இந்திய பகுதியில் இருந்து விரடடியடிக்க தவறி விட்டது. மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில், மோடி உருவாக்கிய பேரழிவில் இருந்து நாட்டை மீட்டு முன்னேற்ற பாதையில் திருப்புவதுதான் காங்கிரசின் முன்னுரிமை பணி. அதை உணர்ந்து காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினாா்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை’; செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை கலந்து கொள்கிறார்.
2. கொரோனா எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்துகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டி உள்ளது.
3. கொரோனா டூல்கிட் விவகாரம்; 11 மத்திய மந்திரிகளின் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்
கொரோனா டூல்கிட் விவகாரத்தில் 11 மத்திய மந்திரிகளின் டுவிட்டர் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
4. ‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை
‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
5. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் சட்டசபையில் முன்வரிசைக்கு போட்டி போட்ட பிரின்ஸ், விஜயதரணி
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், சட்டசபையில் முன்வரிசை இருக்கைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் போட்டி போட்டனர். இதனால், உள்கட்சி பிரச்சினை அவையிலும் எதிரொலித்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை