ஆக்சிஜன் ரெயில் மூலம் கர்நாடகத்துக்கு இதுவரை 2,237 டன் ஆக்சிஜன் வினியோகம்


ஆக்சிஜன் ரெயில் மூலம் கர்நாடகத்துக்கு இதுவரை 2,237 டன் ஆக்சிஜன் வினியோகம்
x
தினத்தந்தி 30 May 2021 7:03 PM GMT (Updated: 30 May 2021 7:03 PM GMT)

கர்நாடகத்துக்கு இதுவரை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 2,236.59 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கொேரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி வருகிறது. இந்த நிலையில் நேற்று 19-வது ஆக்சிஜன் ரெயில் ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து பெங்களூரு ஒயிட்பீல்டுக்கு வந்தது. அதில் 120 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் 6 டேங்கர்களில் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து திரவ ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் மூலம் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

கர்நாடகத்துக்கு இதுவரை 2,236.59 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே இதுவரை 305 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் 1,237 டேங்கர்கள் மூலம் 15 மாநிலங்களுக்கு 20 ஆயிரம் டன் திரவ ஆக்சிஜனை சப்ளை செய்துள்ளது.

இந்த தகவலை தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story