தேசிய செய்திகள்

அசாம், மே.வங்கம், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம் + "||" + Haryana records 1233 new #COVID19 cases, 3453 recoveries, and 80 fatalities in the last 24 hours; active cases at 16,280

அசாம், மே.வங்கம், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்

அசாம், மே.வங்கம், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் சற்று குறையத்தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 4,682- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து 4,992- பேர் குணம் அடைந்த நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 51 பேர்  உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 51,333- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,424- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17,722-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 137- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 78,613- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1233- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 3453- பேர் குணம் அடைந்த நிலையில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 16,280- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பஞ்சாபில் கொரோனா பாதிப்புடன் 2184- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5039-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 33,444- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா
மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 345- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 1,986 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.